ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலய மாசித் தெப்பத் திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
Feb 23 2021 7:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலய மாசித் தெப்பத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் மாசி மாதத்தில் 9 நாட்கள் நடைபெறும் தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஸ்ரீரங்கம் அரங்க நாதசுவாமி கோயிலில் திருப்பள்ளியோடத் திருவிழா எனும் தெப்பத்திருவிழா கடந்த 15ம் தேதி தொடங்கியது. இதையடுத்து நம்பெருமாள் தினசரி வெள்ளிகருடன், யானை வாகனம், அனுமந்த வாகனம் என பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி லா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கியநிகழ்வான நேற்று மூலஸ்தானத்திலிருந்து உபய நாச்சியர்களுடன் புறப்பட்ட நம்பெருமாள், தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்தைச் சேர்ந்தடைந்தார், அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்துவந்த அவர், தீர்த்ததக்குளத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தெப்பமானது 3 முறை வலம் வந்து சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, மண்டபத்திலிருந்து புறப்பட்டு மூலஸ்தானத்தைச் சென்றடைந்தார். இதனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு வழிபட்டனர்.