திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலகு குத்தி, காவடி எடுத்து பக்தர்கள் சாமி தரிசனம்
Feb 23 2021 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவினை முன்னிட்டு திருவனந்தபுரம் , கன்னியாகுமரி, விருதுநகர், ராஜபாளையம் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் , காவடி சுமந்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.