மாசி மகத்தை முன்னிட்டு கும்பகோணம் வரும் பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடல் - தேரோட்டத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Feb 26 2021 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாசி மகத்தை முன்னிட்டு கும்பகோணத்திற்கு வருகை தரும் பக்தர்கள், மகா மகக் குளத்தில் புனித நீராடி வருகின்றனர். ஸ்ரீசக்கரபாணி சுவாமி கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

கும்பகோணத்தில் மாசிமக விழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி, நண்பகல் 12 மணிக்கு மேல், மகாமகக் குளத்தில் நடைபெற உள்ளது. அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களே கும்பகோணத்திற்கு வருகை தந்து, மகாமக குளத்தில் புனித நீராடி வருகின்றனர். முன்னதாக, ஸ்ரீசக்கரபாணி ஆலயத்தின் திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளிய திருத்தேரை, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து, நான்கு வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00