திருக்கழுக்குன்றத்தில் அபிராமி நாயகி உடனுறை உருத்திரகோட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Apr 7 2021 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் திருக்கோயிலின் உபகோயிலான அபிராமி நாயகி உடனுறை உருத்திர கோட்டீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்திருக்கோயிலின் ராஜகோபுரம், சுவாமி, அம்பாள் கோபுர விமானங்கள், தரை தளம் ஆகியவை சுமார் 50 லட்ச ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்ததை அடுத்து, ஊர்பொதுமக்கள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். மகா தீபாராதனையுடன் 4 கால பூஜைகள் முடிவுற்றதைத் தொடர்ந்து, மங்கள வாத்தியம், சிவவாத்தியங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.