கும்பகோணத்தில் பழமை வாய்ந்த சிவன்கோயில் திருப்பணிகள் தொடர்பாக அறநிலையத்துறை, தொல்லியல் துறை இடையே மோதல்? : தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Sep 13 2021 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

கும்பகோணம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயிலில் திருப்பணிகளை விரைந்து முடித்து பக்‍தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்‍க வேண்டுமென கோரிக்‍கை எழுந்துள்ளது.

கும்பகோணம் அருகே மானம்பாடியில், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு, முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டது நாகநாத சுவாமி ஆலயம். பிச்சாடனார், நடராசர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் பிரம்மா உள்ளிட்ட 50-க்‍கும் மேற்பட்ட கற்சிலைகள் இருந்தன. இக்கோயிலை முறையாக பராமரிக்‍காததால், சிதிலமடைந்து இடிந்து விழும் சூழலில் இருந்தது. இதுகுறித்த அறிந்த மாண்புமிகு அம்மா, இந்த ஆலயத்தை பழமை மாறாமல் புதுப்பிக்‍க, கடந்த 6 ஆண்டுகளுக்‍குமுன் முதற்கட்டமாக 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்‍கி உத்தரவிட்டார். இதையடுத்து, பணிகள் தொடங்கி சில மாதங்களில் நிறுத்தப்பட்டன. இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அறிய முற்பட்டபோது, அறநிலையத்துறை, தொல்லியல் துறை இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல் காரணமாகவே திருப்பணிகள் முடிவடையாமல் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்‍கை எடுக்‍க சமூக ஆர்வலர்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00