திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்‍கோயிலில் தாயார் திருவடி சேவையை திரளான பக்‍தர்கள் தரிசனம்

Oct 12 2021 7:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்‍கோயிலில், ஆண்டுக்‍கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவையை திரளான பக்‍தர்கள் தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்‍கோயிலில் நவராத்திரி உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளான இன்று தாயார் திருவடி சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. ரங்கநாயகி தாயார், மூலஸ்தானத்திலிருந்து வெண்பட்டு உடுத்தி, கிளிமாலை, ஏலக்காய் ஜடை மாலை மற்றும் ஆபரணங்கள் சூடியபடி, தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, கண்ணாடி அறைக்குச் சென்று, அரையர்கள் சேவை கண்டு, பின்னர் தங்கமுலாம் பூசப்பட்ட கொலுமண்டபத்தில் பொற்பாதங்கள் தெரிய எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, முகக்‍கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00