நவக்‍கிரகத் தலங்களில் பிரசித்திபெற்ற ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா - கொரோனா பரவலால் குட முழுக்‍கிற்குப் பின்னர் பக்‍தர்களுக்‍கு அனுமதி

Oct 24 2021 3:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்‍கோயிலில் மகா குடமுழுக்‍கு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

1500 ஆண்டுகள் பழமையானதும், அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்றதுமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆலயத்தில் ராகு பகவான், முழு உருவத்துடன் இரு மனைவியருடன் மங்கள ராகுவாக அருள்புரிகிறார். ராகு தோஷம், காலசர்ப்ப தோஷங்கள், களத்திர தோஷங்கள் விலகும் என நம்பப்படுகிறது. இப்பழமையான கோயிலின் குடமுழுக்கு விழா, 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. யாகசாலை பூஜைகளில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் கலந்துகொண்டனர். இன்று காலை 10.20 மணி அளவில், நாகநாத சுவாமி ஆலயத்திற்கு மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. ஏழு ராஜகோபுரங்கள் 5 மூல விமானங்களில் வேதமந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் கோவில் கலசங்களுக்கு புனித நீரால் குடமுழுக்கு செய்தனர்.

இக்கோவிலுக்‍கு பக்‍தர்களின் காணிக்கையாக 4 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக, கும்பாபிஷேக விழா முடிந்த பின்னரே பக்‍தர்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்‍கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00