சென்னை வடபழனி முருகன் கோவிலில் நடந்த தைப்பூச விழா - கொரோனா பரவல் காரணமாக பக்‍தர்களுக்‍கு அனுமதி மறுப்பு

Jan 18 2022 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலுக்‍கு வந்த பக்‍தர்கள், கொரோனா பரவல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளான இன்று முருகனுக்கு விரதமிருந்து மாலை அணிந்து காவடி எடுத்து பக்தர்கள் நடந்து முருகர் கோவிலுக்கு சென்று தங்களுடைய நேர்த்திக் கடன்களை செய்வது வழக்‍கம். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெள்ளி சனி ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவிலில் பக்‍தர்கள் வழிபட அரசு தடை விதித்து இருந்தது. இதனைத்தொடர்ந்து தைப்பூசத்திற்கும் சேர்த்து மொத்தம் 5 நாட்கள் ஆலயங்களில் பொதுமக்கள் வழிபட தடை விதிக்‍கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தைபூச நாளான இன்றும் கோவில் மூடப்பட்டுள்ளதால், பொது மக்கள் சுவாமியை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தை பூச நாளில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் சாமி தரிசனம் செய்ய அரசு அனுமதித்து இருக்கலாம் என பக்‍தர்கள் தெரிவித்தனர். தைப்பூச நாளில் முருகன் கோயில்கள் திறக்‍கப்படாதது தங்களுக்‍கு ஏமாற்றமளிப்பதாக அவர்கள் கூறினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00