கோவில் திருவிழாவையொட்டி கமுதி அருகே நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம் - ஒன்றையொன்று போட்டிப்போட்டு முந்திய காட்சிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளிப்பு

May 16 2022 1:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயத்தில் வண்டிகள் சீறிப்பாய்ந்த காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். மாட்டு வண்டிகள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்ற காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக்‍ கவர்ந்தன.

கடலாடி அருகே தனியன்கூட்டம் கிராம வனப்பேச்சி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, இரு பிரிவுகளாக மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தப்பட்டது. இதில் சின்னமாடு, பெரியமாடு என 28 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரியமாடு பந்தயத்தில் 10 கிலோமீட்டர் தூரமும், சின்ன மாடு பந்தயத்தில் ஆறு கிலோமீட்டர் தூரமும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. பந்தயத்தின்போது மாட்டு வண்டிகள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்றதை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இந்தப் பந்தயத்தில், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன. முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளர்களுக்‍கு ரொக்‍கம் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியைக்‍ காண கடலாடி, முதுகுளத்தூர், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்திருந்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00