சபரிமலை ஐயப்பன் கோவிலில் 18 ஆம் படிக்‍கு மேல் தானியங்கி மேற்கூரை - பணிகள் நாளை தொடங்கும் என அறிவிப்பு

May 17 2022 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 18 ஆம் படிக்‍கு மேல் தானியங்கி மேற்கூரை அமைக்‍கும் பணிகள் நாளை தொடங்க உள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மிக முக்‍கியமான பூஜைகளில் ஒன்றான படிபூஜைக்‍கு மிக அதிகமாக 75 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரவு தீபாராதனைக்குப் பிறகு தந்திரி, மேல்சாந்தி ஆகியோரின் முன்னிலையில் 18 படிகளுக்கும் மலர் தூவி சிறப்பு பூஜை நடத்தப்படும். இதனால் சில ஆண்டுகளுக்‍கு முன் 18ம் படிக்கு மேல் கண்ணாடி கூரை அமைக்கப்பட்டது. பின்னர் பிளாஸ்டிக்‍ தார்பாய் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 18-ம் படிக்கு மேல் தானியங்கி மேற்கூரை அமைக்க ஹைதராபாத்தைச் சேர்ந்த கட்டட நிறுவனம் ஒன்று முன்வந்து உள்ளது. சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் ஹைட்ராலிக் முறையில் இயங்கும் இந்த மேற்கூரை அமைக்‍கப்பட உள்ளது. தேவைப்படும்போது இதை கூரையாகவும், தேவையில்லாத சமயங்களில் இருபுறங்களிலும் மடக்கியும் வைக்கலாம். சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்த தானியங்கி மேற்கூரையை வடிவமைத்து உள்ளது. நாளை காலை சிறப்பு பூஜையுடன் இதற்கான பணிகள் தொடங்க உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00