வைகாசி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல அனுமதி : வரும் 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்‍தர்கள் தரிசிக்‍கலாம்

May 24 2022 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வரும் 27 ஆம் தேதி முதல் வரும் 31 ஆம் தேதி வரை 5 நாட்கள் அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு வரும் 27 ஆம் தேதி முதல் வரும் 31 ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணிவரை மட்டுமே மலை ஏறி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

அனுமதி அளிக்‍கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் மலையேறி சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும் என்று அறிவிக்‍கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்லவும், பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்கவும் தடை விதிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00