திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் பல்லாயிரக்‍கணக்‍கில் குவியும் பக்‍தர்கள் கூட்டம் - 4 கிலோ மீட்டர் வரை அணி வகுத்து தரிசனத்திற்கு காத்திருக்‍கும் மக்‍கள்

May 28 2022 2:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்‍தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், 5 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கமாக வார இறுதிநாள்களில் பக்‍தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம்தான். ஆனால், தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டம் அதிகரித்திருப்பதால், விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. கோயில் வளாகத்துக்கு வெளியே வைகுந்தம் காம்ப்ளக்சின் 33 அறைகளிலும் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு வரிசையில் அனுப்பி வைக்கப்பட்டாலும், தரிசனத்துக்கான பக்தர்கள் காத்திருக்கும் வரிசை, 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் அறைகள் கிடைக்‍காததால், சொந்த வாகனங்கள், திறந்தவெளி ஆகியவற்றில் பக்‍தர்கள் தங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00