கொரோனா தொற்று அதிகரிப்பு : மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்‍தர்கள் முகக்‍கவசம் இன்றி அனுமதி - காற்றில் பறந்த சமூக இடைவெளி

Jun 28 2022 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பிரசித்திபெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் பக்‍தர்கள் முகக்‍கவசம் இன்றி அனுமதிக்‍கப்பட்டதுடன், கொரோனா தடுப்பு நடவடிக்‍கைகள் பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

மதுரையில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை பாதிப்பு 100ஐ கடந்துள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் உட்பட பொது இடங்களில் முகக்‍கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோயிலில், பக்தர்கள் முகக்‍கவசம் இன்றி அனுமதிக்கப்பட்டதுடன், சமூக இடைவெளி உட்பட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இதே நிலை நீடித்தது. கொரோனா தாக்‍கம் அதிகரித்திருப்பதாகக்‍கூறி விதிகள் அமல்படுத்தப்பட்டாலும், அவை பின்பற்றப்படாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00