ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகன்நாதர் கோவில் தேரோட்ட திருவிழா - வழக்கமான உற்சாகத்துடன் கோலாகல தொடக்கம்

Jul 1 2022 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகன்நாதர் கோவில் தேரோட்ட திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வருக்கு அருகே உள்ள பூரியில் உலக புகழ்பெற்ற ஜெகன்நாதர் ஆலயம் உள்ளது. இக்‍கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர் திருவிழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பக்‍தர்கள் பங்கேற்பர். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தேரோட்டம், இந்த ஆண்டு வழக்‍கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இன்று தொடங்கியுள்ள தேரோட்டம் 42 நாட்களுக்‍கு நடைபெறும். பக்தர்கள் வெள்ளத்தில், அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் பகவான் ஜெகன்நாதர், தேவி சுபத்ரா, பாலபதரா ஆகியோர் வலம் வருவர்.

ஜெகன்நாதர் தேர் திருவிழாவையொட்டி பிரதமர் திரு.மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெகன்நாதரின் நிலையான ஆசீர்வாதத்திற்காக பிரார்த்தனை செய்வோம் என்றும், அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டுவதாகவும் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00