திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் : செப்டம்பர் 27ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Jul 1 2022 6:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் கோவிலுக்கு வெளியே நான்கு மாட வீதிகளில் வழக்கம்போல் நடைபெற உள்ளன. இந்த பிரம்மோற்சவத்தை சிறப்பாக நடத்துவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்க உள்ளதாக தெரிவித்தார். ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் 5வது நாளான அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி கருட வாகன சேவை நடைபெறும் என்றார் அவர். மத்திய அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பக்தர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00