ஆடித் திருவிழாவையொட்டி ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் : கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

Jul 24 2022 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரத்தில் ஆடித்திருவிழா தொடங்கியிருப்பதாலும், இன்று வார விடுமுறை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி திருவிழா 14 நாட்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று ஆடி திருவிழா மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகம் மட்டும் இன்றி வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர். ராமநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் நான்கு ரத வீதிகளிலும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. ஏராளமான வாகனங்கள் கோயில் வரை அணிவகுத்து நிற்கின்றன. இதேபோல், தனுஷ்கோடியிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00