மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

Jul 29 2022 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைப்பெறுவது வழக்கம். அதன்படி, ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று நள்ளிரவு ஊஞ்சல் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைப்பெற்றது. அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைப்பெற்றது.

இதனைத்தொடர்ந்து பட்டு சேலை உடுத்தி, நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மனை பக்‍தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். கோயில் வெளி பிரகாரத்தில் தாலாட்டு மண்டபத்தில் உள்ள தங்க ஊஞ்சலில் மங்கல சண்டிகை அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது ஊஞ்சலை ஆட்டியபடி பம்பை, உடுக்கை, மேள தாளங்கள் முழுங்க தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேல்மலைனூர் அம்மன் ஆலய ஊஞ்சல் உற்சவ விழாவில் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00