மதுரை கோயில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே அசைவம் சமைத்து சாப்பிட்ட நிகழ்ச்சி : மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்கள் பிராத்தனை

Aug 2 2022 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மேலூர் அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே, அசைவம் சமைத்து சாப்பிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ​இந்த திருவிழாவில் போது மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்கள் பிராத்தனை செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சின்னகண்மாய் கரையில் அமைந்துள்ளது ஐந்து முனிசாமி ஆலயத்தில் வருடாந்திர ஆடிப்டையில் திருவிழா நடைபெற்றது. கச்சிராயன்பட்டி, சுந்தரராஜபுரம், வீரசூடாமணிப்பட்டி ஆகிய 3 கிராமத்தினர் இணைந்து இத்திருவிழாவை சிறப்பாக நடத்தினர். விழாவின் போது பக்தர்கள், நேத்திகடனாக ஆடு, சேவல்களை பலியிட்டனர். அவ்வாறு பலியிடப்பட்ட 90 ஆடுகள், 800 சேவல்களின் இறைச்சிகள் சமைக்‍கப்பட்டன. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், கோயில் எதிரே அடுப்பு மூட்டப்பட்டு சமைக்‍கப்பட்ட இறைச்சி உணவில் மசாலா பொருள்கள் கலக்‍கப்படாமல் வேப்பிலை சேர்க்‍கப்பட்டது. மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி அனைத்து சமுதாயத்தினருக்கும் கறி உணவு பங்கிட்டு கொடுக்கப்பட்டது.

இறைச்சியை வேப்பிலையுடன் சமைக்கும் போது அதன் சுவையை இழக்காமல் தெய்வீக சக்தியால் சுவையாக இருக்குமென கிராமத்தினர் கூறுகின்றனர். மேலும் மழைவேண்டியும், மக்கள் நோயின்றி வாழவும் இந்த ஆடிப்படையல் திருவிழா நடத்தப்படுவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00