உசிலம்பட்டி அருகே பாரம்பரிய சிறப்புடன் நடைபெற்ற தாய்மாமன் திருவிழா : வேல்கம்பு, விதை நெல்லுடன் ஊர்வலமாக வந்த தாய்மாமன்களுக்கு பரிவட்டம்

Aug 4 2022 3:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூர் கருப்பசாமி கோவிலில் தாய்மாமன் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கையில் வேள்கம்பு மற்றும் விதை நெல்லுடன் ஊர்வலமாக வந்த தாய் மாமன்களுக்கு, உறவினர்கள் பரிவட்டம் கட்டி அழகுபார்த்தனர்.

தமிழ் நாட்டு மக்கள் வாழ்வியலில் தாய்மாமன் உறவு முறை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மொட்டை போடுதல்-காதணி விழா-சடங்கு-திருமணம் என குழந்தை பிறந்ததிலிருந்து அனைத்து இல்ல நிகழ்ச்சிகளிலும் தாய்மாமன் இன்றி நடை​பெறுவதில்லை.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த தாய்மாமன் உறவின் முறைக்‍கு மதிப்பளிக்‍கும் விதமாக ஆடிப்பெருக்கு நாளில் தாய்மாமன் திருவிழா மதுரை மாவட்ட மக்‍கள் கொண்டாடினர்.

உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் கருப்பசாமி கோவிலில் நடைபெற்ற தாய்மாமன் தின பெருவிழாவில் கையில் வேள்கம்பு மற்றும் விதை நெல்லுடன் ஊர்வலமாக வந்த தாய் மாமன்களுக்கு மைத்துனர்கள் பரிவட்டம் கட்டி, அழகுபார்த்தனர்.

பின்னர் பொங்கல் வைத்து தாய்மாமன் மடியில் அமர்ந்து குழந்தைகளுக்கு காது குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தாய்மாமன்கள் கொண்டு வந்த விதை நெல் மைத்துனர்களுக்‍கு வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00