நாகையை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு திருவிழா - இன்று இரவு நடைபெறுகிறது பெரிய தேர் பவனி

Sep 7 2022 7:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகையை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு திருவிழாவையொட்டி, பெரிய தேர் பவனி இன்று இரவு நடைபெறுகிறது.

நாகை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி இன்று நடைபெறுகிறது. அத்துடன் ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாளான 8-ம் தேதி திருவிழா சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக வேளாங்கன்னியை நோக்கி வருகை தருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராலயத்தின் சார்பிலும் மேற்கொள்ளப்படுகிறது. திருவிழாவையொட்டி வேளாங்கன்னியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00