வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுப்பெருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு : சிறப்புப் பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்பு

Sep 9 2022 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுப்பெருவிழா கொடி இறக்க நிறைவு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளான நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலையில் திருவிழாவின் இறுதி நிகழ்வான கொடி இறக்கம் நிகழ்ச்சி பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை அற்புதராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பேராலய நிர்வாகம் சார்பில் காவல்துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்துத்துறைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. திருவிழாவையொட்டி வேளாங்கண்ணி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00