மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா தொடக்‍கம் : மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை

Sep 12 2022 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், ஆவணித் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் தொடங்கியது. இதில் மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பெண் பக்தர்கள் வருகை தந்தனர்.

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், இந்த ஆண்டுக்‍கான ஆவணித் திருவிழா, சிறப்புப் பூஜைகளுடன் தொடங்கியது. காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த விழாவில், உற்சவமூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷ பூஜை, பஜனை சுமங்கலி பூஜை, அத்தாழ பூஜைகள் நடைபெற்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், பொங்கல் வழிபாடு நாளை நடைபெறுகிறது. 5001 பொங்கல் வழிபாடு நாளை கோயில் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00