சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வுப் பணி சில நாட்களுக்கு நீடிக்கும் என தகவல்

Sep 13 2022 10:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வுப் பணி, 3-வது கட்டமாக துவங்கி சில நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி உள்ளிட்ட சுவாமிகளுக்கு ஏராளமான தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகள் உள்ளன. இந்த நகைகள் அனைத்தையும் தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறை சரிபார்ப்பு மற்றும் ஆய்வு செய்து வருகிறது. கடந்த மாதம் 22 ஆம் தேதி, முதற்கட்டமாக இந்த பணிகள் தொடங்கியது. இதுவரை, 2 கட்டங்களாக கடந்த 2 ஆம் தேதி வரை 8 தினங்கள் இந்த நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணிகள் நடந்தது.

இந்நிலையில் 3 வது கட்டமாக நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளது. 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினரால் இந்த பணி நடந்து வருகிறது. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு கோயிலுக்கு வரப்பட்ட நகைகள் குறித்த ஆவணங்களை பார்வையிட்டு, அதிகாரிகள் குழுவினர் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். 3 வது கட்டமாக 9-வது நாளாக துவங்கியுள்ள இந்த ஆய்வு பணி, இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என இந்து சமய அறநிலையத் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00