'அன்னதானம்' என்ற பெயரில், தனிநபர், தனியார் அமைப்புகளுக்கு காணிக்கை வழங்க வேண்டாம் - திருமலை-திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்‍கை

Sep 20 2022 7:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

'அன்னதானம்' என்ற பெயரில், தனிநபர், தனியார் அமைப்புகளுக்கு காணிக்கை வழங்க வேண்டாம் என, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வரும் 27-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை, வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இதனையொட்டி, அன்னதானம் என்ற பெயரில் தனி நபருக்கோ, அமைப்புக்கோ பக்தர்கள் காணிக்கை வழங்க வேண்டாம் என்றும், திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் இலவசமாக அன்னதானம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமலையில் அன்னதானம் செய்யப்போவதாகக் கூறி, செகந்திராபாத்தைச் சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகம், அண்மையில் பக்தர்களிடம் காணிக்கைகள் கேட்டதை சுட்டிக்காட்டியுள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானம், இந்த அறக்கட்டளைக்கும், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக காணிக்கைகள் வசூலிக்கும் அறக்கட்டளைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00