திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா - 30-ம் தேதி முதல் 2-ம் தேதிவரை மோட்டார் சைக்‍கிள்களுக்‍கு தடை

Sep 23 2022 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவை ஒட்டி 12 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்‍கப்பட உள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவையொட்டி திருமலை முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்‍கப்பட்டுள்ளது . பிரம்மோற்சவ விழாவின்போது ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி, பூதேவி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதனை காண்பதற்காக 4 மாட வீதிகளில் ஏராளமான பக்‍தர்கள் வருவது வழக்‍கம். திருமலையில் 12 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கு மட்டுமே இடவசதி உள்ளதால், கார், வேன் உள்ளிட்ட 12 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்பட உள்ளது. கூடுதலாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் திருப்பதியில் நிறுத்திவிட்டு திருமலைக்குச் செல்லும் அரசு பேருந்துகளில் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கருட சேவைக்கு முந்தின நாளான 30-ந் தேதி மதியம் 2 மணி முதல் 2-ந் தேதி இரவு வரை திருமலைக்கு மோட்டார் சைக்‍கிள்களில் செல்ல அனுமதி இல்லை.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00