கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்‍தர்கள் - சரண கோஷம் முழங்க, மாலை அணிந்து பக்‍தர்கள் வழிபாடு

Nov 17 2022 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலிலும், இன்று காலையிலேயே ஐயப்ப பக்தர்கள் திரண்டனர். அவர்கள் குளித்துவிட்டு சந்தனம், குங்குமம் திலகமிட்டு மாலை அணிந்து கொண்டனர்.

இன்று அதிகாலை 4.30 மணி முதல் கோவில் நடை திறப்பதற்கு முன்னதாகவே பக்தர்கள் இங்கு வரத்தொடங்கினார்கள். கொரோனா அச்சத்திற்கு பிறகு இந்த ஆண்டு பக்தர்கள் அதிகளவில் மாலை அணிந்து இருக்கிறார்கள்.

முக்கடல் சங்கமம் கன்னியாகுமரியில் கடலில் இன்று அதிகாலையிலேயே புனித நீராடிய பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி விரதத்தை தொடங்கினர். பின்னர் அவர்கள் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

இதேபோல் திருச்சியில் உள்ள மலைக்கோட்டை விநாயகர் கோவிலிலும் குவிந்த ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர்.

விநாயகர் சந்நதியின் முன்பு காவிவேட்டியுடுத்தியும், துளசி மாலையணிந்தும் அவர்கள் விரதம் தொடங்கினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00