கார்த்திகை தீபத்தையொட்டி முருகனின் அறுபடை வீடுகள் உட்பட தமிழகத்தின் பிரசித்திபெற்ற கோயில்களில் ஏற்றப்பட்ட மகா தீபம் - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Dec 6 2022 7:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

முருகனின் அறுபடை வீடுகள் உட்பட தமிழகத்தின் பிரசித்திபெற்ற கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மகா தீபம் மற்றும் சொக்‍கப்பனை ஏற்றும் நிகழ்வில் ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி ஆலயத்தில், கார்த்திகை தீபத் திருவிழா வெகுசிறப்பாகக நடைபெற்றது. கோயிலில் 6 மணிக்‍கு பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள உச்சிபிள்ளையார் கோயிலில் 3 அடி உயர செப்பு கொப்பரையில், 300 லிட்டர் நெய், 150 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் ஆகியவற்றைக்‍ கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இவ்விழாவில், பெருந்திரளான பக்‍தர்கள் கலந்து கொண்டு பக்‍தி கோஷம் முழுங்க சாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்‍கிய நிகழ்ச்சியான சொக்‍கப்பனை ஏற்றும் நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி, கடற்கரையில் வேதமந்திரங்கள் முழங்க சொக்‍கப்பனை ஏற்பட்டது. இதனை, ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் பக்‍தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

முருகப் பெருமானின் மூன்றாம்படை வீடான பழனி தண்டாயுதபாணி மலைக்‍கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. யாகசாலை பூஜைக்‍குப் பின்னர் மலைக்‍கோயில் வெளிபிரகாரத்தில் உள்ள தீபஸ்தம்பத்துக்‍கு பரணி தீபம் கொண்டுவரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகளுக்‍குப்பின் மேளதாளம் முழங்க மகாதீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, பனை மற்றும் தென்னை ஓலைகளால் அமைக்‍கப்பட்ட சொக்‍கப்பனை ஏற்றப்பட்டது. இவ்விழாவில் ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் பங்கேற்றனர்.

தென்கயிலாயலம் என போற்றப்படும் திருச்சி மலைக்‍கோட்டை தாயுமானவர் கோயிலில் கார்த்திகை தீப திருநாளை யொட்டி, காலை பரணி தீபம் ஏற்பட்டது. தொடர்ந்து, மாலை தாயுமானவர் சன்னதியில் தீபம் ஏற்றப்பட்டு, அங்கிருந்து பஞ்சமூர்த்திகளுடன் தீபப் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், மலைக்‍கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் 900 லிட்டர் எண்ணெய், 300 கிலோ பருத்தி துணி ஆகியவற்றைக்‍ கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. மேள வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்‍கைகளுடன் நடைபெற்ற மகா தீப நிகழ்வை, பக்‍தி பரவசத்துடன் ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00