கன்னியாகுமரியில் தூய ஜான் போஸ்கோ ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றம் : தமிழக கேரளாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Jan 28 2023 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கீழ்குளம் தூய ஜான் போஸ்கோ ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கீழ்குளம் பாத்திமாநகர் தூய ஜான் போஸ்கோ ஆலய ஆண்டு திருவிழாவையொட்டி பங்குமக்கள் பங்கேற்ற ஜெபமாலை மற்றும் புகழ்மாலை பிரார்த்தனை நடைபெற்றது. அதைதொடர்ந்து ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட ஜான் போஸ்கோ உருவம் பொறித்த கொடியை திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட ஆயர் லெனில்ராஜ் மற்றும் மார்த்தாண்டம் மலங்கரை மறைமாவட்ட ஆயர் ஜெரால்ட் ஆகியோர் அர்ச்சிப்பு செய்து கொடி கம்பத்தில் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து திருவிழா திருப்பலி நடைபெற்றது. திருவிழாவையொட்டி ஆலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்டமாக காட்சியளித்தது. தமிழக கேரளாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.