திருச்சியில் 37 அடி உயர சஞ்சீவி ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடைபெற்ற மகா சுதர்சன ஹோமம் : உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் யாவரும் நோயின்றி வாழவும் ஏற்பாடு
Mar 11 2023 2:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்திலேயே உயரமான 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ள ஸ்ரீரங்கம் சஞ்சீவி ஆஞ்சநேயர் ஆலயத்தில் மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக் கரையில் இந்த ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வட காவிரிக்கும், தென் காவிரிக்கும் நடுவில் விஸ்வரூப ஆஞ்சநேயப் பெருமான் தெற்கு முகமாக எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் இவ்வாலயமானது தென் அயோத்தி என அழைக்கப்படுகிறது. உலக நன்மைக்காகவும், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாவரும் நோயின்றி வாழவும் மகா சுதர்சன பெருமாள் மூலமந்திரம் பாராயணம் செய்யப்பட்டு மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.