நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசிமக திருவிழா நிறைவையொட்டி ஊஞ்சல் திருவிழா
Mar 14 2023 10:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசிமக திருவிழா நிறைவை யொட்டி ஊஞ்சல் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கோயிலில் மாசிமக திருவிழா நிறைவையொட்டி விடையாற்றி ஊஞ்சல் திருவிழா நடைபெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி தொடங்கிய தேரோட்டம், தெப்பத்திருவிழா என ஒரு மாத காலம் விமரிசையாக நடைபெற்ற மாசி மகத் திருவிழா நிறைவு பெற்றது. இதையொட்டி நேற்றிரவு மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளிய ஊஞ்சல் திருவிழா நடைபெற்றது. நாதஸ்வர இன்னிசையுடன் ஓதுவார்கள் தேவார பதிகாரங்கள் பாடினர்.