தமிழகத்தின் பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்களில் வைகாசி திருவிழா, பால்குடம், திமீதி திருவிழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

May 21 2023 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்களில் நடைபெற்ற வைகாசி திருவிழா மற்றும் பால்குடம், திமீதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் உள்ள ஸ்ரீ பத்ரகாளிஅம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி சுமந்து வந்த பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை வந்தடைந்ததனர். பின்னர் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. இந்த உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குழிபிறை சந்திக்கருப்பர் கோயிலில் 46ம் ஆண்டு பூச்சொரிதல் விழா விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து சந்திக்கருப்பருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து கருப்பருக்கு காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தினர். இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை கைலாசநாத சுவாமி திருக்கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தொடக்க நிகழ்வான கொடியேற்றம் நடைபெற்றது. இந்த விழாவுக்காக கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதிபாராதனை காட்டப்பட்டது. கொடியேற்ற திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. கீழ்வில்லிவலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அக்னி வசந்த விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. 15 நாட்களாக மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சிறப்புமிக்க அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோவிலில் வசந்த உற்சவம் தியாகராஜரின் திருநடன நிகழ்வுடன் நிறைவு பெற்றது. தியாகராஜ சுவாமி உடனூரை வடிவுடையம்மன் திருக்கோவிலில் வசந்த உற்சவம் கடந்த 5ஆம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. உற்சவத்தின் கடைசி நாளில் அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில் எழுந்தருளிய தியாகராஜர் வடிவுடையம்மன் சன்னதியின் முன்பு வசந்த குளத்தை சுற்றி பின்னர் சன்னதியின் வெளியே எழுந்தருளிய வடிவுடையம்மன் முன்பு மூன்று முறை திருநடனமாடினார். இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கரூர் மாநகரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா விமர்சையாக நடைபெற்றது. பூச்சொரிதல் விழாவையொட்டி கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அம்மனுக்கு பூத்தட்டு கொண்டு வந்து வழிபாடு நடத்தினர். பின்னர் அம்மனை அலங்கரித்து ரதத்தில் வைத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். இசை வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் அம்மனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை கோயிலில் வைகாசி விசாகத்தேர் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வாக இழுக்கும் இருட்டு தேர் என அழைக்கப்படும் அம்மன் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. பாரம்பரியமாக அமாவாசை தின நடு இரவில் அம்மன் புறப்பாடு நடக்கும் போது அனைத்து வீதி விளக்குகள், வீட்டு விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கும். இதனால் இந்த தேரோட்டத்தை இருட்டுத் தேர் என பொதுமக்கள் அழைத்து வந்தனர். இது நாளைடைவில் மருவி திருட்டுத் தேர் என அழைக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக அரசு உத்தரவால் இருளில் இழுக்கப்பட்ட அம்மன் தேர் இந்த வருடம் மாலை நேர வெளிச்சத்தில் இழுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தேரைவடம் பிடித்து இழுத்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் அம்மனுக்கு காப்புகட்டுதல் நிகழ்ச்சியையொட்டி 500க்கும் மேற்பட்ட பெண்கள் பூங்கரகம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கணபதி ஹோமம் நடத்தப்பட்டு முத்துமாரி அம்மனுக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியையொட்டி வானவேடிக்கை, பம்பை உடுக்கை, மேளதாளங்கள் முழங்க 500க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மனுக்கு பூங்கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மெலட்டூரில் பாகவத மேளா என்ற தெய்வீக நாட்டிய நாடகக் கலை நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்ற நாட்டிய நாடகம் மெலட்டூர் லெக்ஷ்மி நரசிம்ம ஜெயந்தி பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாகவத மேளா நாடகவிழா துவங்கப்பட்டது. 10 நாட்கள் நடைபெறும் இந்த நாடக நிகழ்ச்சியில் பிரகலாதா சரித்திரம், ஹரிசந்திரா, வள்ளி திருமணம் போன்ற பல்வேறு நாட்டிய நாடகங்கள் நடைபெறுகின்றன. கலை நயமிக்க இந்த நாடக நிகழ்ச்சியை உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கடக்கம் அகர ஆதனூரில் உள்ள புற்றடி மாரியம்மன் ஆலயத்தில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 87-ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 5ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. இதனை முன்னிட்டு, குளக்கரையிலிருந்து மேள, தாளம் முழங்க கரக ஊர்வலம் துவங்கியது. 20 அடி நீள அலகு காவடி, சக்தி கரகம், தீச்சட்டி கரகம் ஆகியவை ஊர்வலமாக ஆலயத்தினை வந்தடைந்தன. அங்கு தீக்குண்டத்தில் விரதம் இருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00