தமிழகம் முழுவதும் பிரசித்திபெற்ற பல்வேறு கோயில்களில் நடைபெற்ற விழாக்‍களில் திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

May 27 2023 4:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் முழுவதும் பிரசித்திபெற்ற பல்வேறு கோயில்களில் நடைபெற்ற விழாக்‍களில் திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் உள்ள பிரசித்திபெற்ற ஆகாச மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி வந்து பக்‍தர்களுக்‍கு காட்சி அளித்தார். திரளான பக்‍தர்கள் அம்மன் மீது பூக்களைத் தூவி வழிபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி பத்ரகாளி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, வேட்டை பானை போடும் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. பானையில் கொதிக்கும் நீரில் அரிசியிட்ட பின்னர், சாமியாடிகள் கொதிக்கும் நீரை தலையில் ஊற்றி அருளாசி வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்‍தக்‍ரள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

நாமக்கல்லை அடுத்துள்ள காட்டூர் காந்தமலை பாலசுப்பிரமணியம் சாமி திருக்கோவிலில் சஷ்டி திருநாளையொட்டி, தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் காட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் ஒரே வண்ண ஆடை அணிந்து, பாடலுக்கு ஏற்ப ஒன்று சேர கொங்கு ஒயிலாட்டம் ஆடியதை திரளானோர் கண்டு ரசித்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தப்பார் கிராமத்தில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி, அருள்மிகு மருத காளியம்மன், சப்த கன்னிமார், முப்புளியம்மன் தேரோட்ட நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்‍தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தேர் நிலைக்கு வந்து அடைந்தவுடன் வாண வேடிக்கை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் கிராமத்தில் உள்ள வீரகோதண்டராமர் கோயிலில் ராமநவமி பெருவிழாவையொட்டி, சீதா திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பெருந்தேவி தாயார் திருப்பாத சேவை உற்சவத்தையொட்டி, பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. வெள்ளை பட்டு உடுத்தி வைர வைடூரிய ஆபரணங்கள் அணிவிக்‍கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில், தாயார், பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருந்தேவி தாயாரை வணங்கினர்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா வெகு விமரிசையாக தொடங்கியது. அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரங்கத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி கோயில் எதிரில் அமையப்பெற்ற புது மண்டபத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன் குளத்தில் உள்ள முத்துமாரியம்மன் திருக்கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி, கொடியேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர், கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த முத்துமாரி அம்மனை திரளான பக்கத்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00