பாலிவுட் நடிகை சாரா அலிகான் சிவன்கோயிலுக்கு சென்று பிரார்த்தனை
May 31 2023 12:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோயிலுக்கு சென்ற பாலிவுட் நடிகை சாரா அலிகான் பிரார்த்தனை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. தாயுடன் சென்ற சாரா அலிகான் சிவனுக்கு சிறப்பு பூஜைகளை செய்தார். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், எம்மதமும் சம்மதம் என்ற வகையில் சிவன் கோயிலுக்கு சென்று பிரார்தனையில் ஈடுபட்டார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.