புனேவில் விநாயகர் சிலை வைக்க ராமர் கோயில் வடிவில் தயாராகும் பிரம்மாண்ட பந்தல் : ராமர் கோயில் எப்படி இருக்குமென முன்கூட்டியே தெரிந்து கொள்ள ஏற்பாடு
Sep 16 2023 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ராமர் கோயில் வடிவில் வினாயகர் சிலை வைப்பதற்காக பிரம்மாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் நாளை மறுநாள் வினாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனைமுன்னிட்டு புனேவில் ஸ்ரீமந்த் தக்துஷேத் சர்வஜனிக் கணபதி அறக்கட்டளை மூலம் விநாயகர் சிலைகளை வைப்பதற்கான பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே 2024-ஆம் ஆண்டு ராமர் கோயில் திறக்கப்படும்போது அது எப்படி இருக்கும் என்பதை மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிப்பதற்காக ராமர் கோயில் வடிவில் பந்தல் அமைக்கப்பட்டு வருவதாக பந்தல் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.