திருப்பதி பிரம்மோற்சவ 4-ம் நாள் திருவிழா கோலாகலம் : கல்பவிருட்ச வாகனத்தில் எழுந்தருளி சுவாமி பக்தர்களுக்கு சேவை
Sep 21 2023 1:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ திருவிழாவின் 4-வது நாளில் சுவாமி கல்பவிருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 4ம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி கல்பவிருட்ச வாகனத்தில் எழுந்தருளில் நான்கு மாட வீதிகளில் உலா வந்தார். அப்போது, பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா என்ற கோஷம் முழங்க சாமியை வழிபட்டனர். இதனிடையே, யானைகள், குதிரைகள், காளைகள் அணிவகுத்து செல்ல நரசிம்மர் வேடமிட்டு பலர் நடனமாடிய கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.