கோவை மருதமலை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல 2 நாட்கள் தடை விதிப்பு : கோவில் பேருந்து, படிக்கட்டு பாதை வழியாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அறிவுறுத்தல்
Nov 17 2023 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் மருதமலை மலைப்பாதையில் நாளை முதல் 2 நாட்கள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நாளை மாலை 3 மணிக்கு சூரசம்ஹாரமும், நாளை மறுநாள் காலை 9 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. இதனையடுத்து, மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவில் பேருந்து மற்றும் படிக்கட்டு பாதை வழியாக பக்தர்கள் கோவிலுக்கு செல்லலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.