உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பிரார்த்தனை : மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜெயில் உள்ள பிரசித்திபெற்ற மகாகல் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு
Nov 19 2023 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா கோப்பையை வெல்ல வேண்டி, நாடு முழுவதும் ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர். இந்திய அணி வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
50 ஓவர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில், இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டி நாடு முழுவதும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருவதுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகாகல் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. சிந்தியா காட் பகுதியில் நடைபெற்ற பிரார்த்தனையில், இந்திய வீரர்களின் புகைப்படம் மற்றும் தேசியை கொடியை வைத்து ரசிகர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
இதனிடையே, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்திய அணியை உற்சாகப்படுத்தும் வகையிலும், உலகக் கோப்பை வெல்ல வேண்டியும், ஷிவாத்யா பிரதிஷ்டானின் உறுப்பினர்கள் அம்மாநில பாரம்பரிய மேளம் அடித்து உற்சாகப்படுத்தினர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்தியா வெற்றி பெற சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டி, புனேவில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டு வழிபட்டனர்.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டி, ஹூப்ளி விளையாட்டு கழகத்தினர் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டி, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஹனுமான் கர்ஹி கோயிலில் ரசிகர்கள் சிறப்பு பஜனை வழிபாடு நடத்தினர்.