வார விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள் : நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
Nov 19 2023 3:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வார விடுமுறையையொட்டி திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், இன்று வார விடுமுறையையொட்டி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பால், உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.