சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதிகரித்த பக்தர்கள் கூட்டம் : அடிப்படை வசதிகள் செய்யவில்லை என வாகன ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு
Nov 19 2023 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதம் 3ம் நாளான இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பக்தர்களை அழைத்து வரும் ஓட்டுனர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். சபரிமலை ஐயப்பன் திரூக்கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்களின் கார், பஸ் போன்ற அனைத்து வானங்களும் நிலக்கல் பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்படுகிறது. தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு ஓய்வெடுக்க ஓய்வு அறை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கேரளா அரசு ஏற்படுத்திகொடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.