களக்காடில் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு - நம்பி கோவில் செல்ல 2-வது நாளாக தடை : வெள்ளம் குறைந்த பின் அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை தகவல்
Nov 20 2023 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் களக்காடில் பெய்து வரும் மழை காரணமாக, பச்சை ஆறு மற்றும் நம்பியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நம்பி கோவில் செல்ல 2வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது. களக்காடு, நாங்குநேரி, திருக்குறுங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 6 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இந்நிலையில் களக்காடு தலையணையில் குளிக்கவும், திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்லவும் வனத்துறை இன்றும் தடை விதித்துள்ளது. வெள்ளம் குறைந்த பின் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.