திருவண்ணாமலையில் பஞ்ச மூர்த்திகளின் தேர்களுக்கு கலசங்கள் பொருத்தம் பணி : விநாயகர் சன்னதியில் கலசங்களுக்கு சிறப்பு பூஜை
Nov 21 2023 7:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பஞ்ச மூர்த்திகளின் தேர்களுக்கு கலசங்கள் பொருத்தம் பணி நடைபெற்றது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7ம் நாள் திருவிழாவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளும் தேர்களின் உச்சியில் கலசங்கள் பொருத்தும் பணி இன்று நடைபெற்றது. முன்னதாக கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.