தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களில் கார்த்திகை சொக்கப்பனை ஏற்றி சிறப்பு வழிபாடு : பக்தி பரவசத்துடன் பெருந்திரளான பக்தர்கள் மனமுருக தரிசனம்

Nov 27 2023 9:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் ருத்ர தீபம் எனப்படும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கார்த்திகையையொட்டி பரணி தீபம் ஏற்றபட்டு பின்னர் அதனைக் கொண்டு சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ராமநாதபுரம் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் திருக்கார்த்திகையையொட்டி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் கூடி நின்று தரிசனம் செய்தனர்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி கோயில் உள்பிரகாரம் மற்றும் தேரடி வரை திருவீதி உலா நடைபெற்றது. பின்னர் அம்மன் முன்பாக சொக்கப்பனை ஏற்றப்பட்டது. தொடர்ந்து அம்மன் தேரோடும் வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தி தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.

தீபத்திருவிழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், கல்யாணராமர் கோவில் மற்றும் ஈஸ்வரன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அகல் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

தென்காசியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காசி விஸ்வநாதர் மற்றம் உலகம்மன் சப்பரத்தில் எழுந்தருள, கோவிலின் முன் உள்ள இரண்டு வீதிகளிலும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த துலுக்கன்குறிச்சியில் உள்ள வாழை மர பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகையையொட்டி சுவாமிக்கு 11 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது.

நாகை மாவட்டம் சிக்கலில் உள்ள புகழ்பெற்ற சிக்கல் சிங்கார வேலவர் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக கோவில் உட்பிரகாரத்தில் சிங்காரவேலவர் வள்ளி-தெய்வானையுடனும், தியாகராஜர், பெருமாள் வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தி ராஜ கோபுரத்தில் தீபம் ஏற்றப்பட்டது. மேலும் வேலூரைச் சுற்றியுள்ள சார்ப்பனாமேடு மலை, சைதாப்பேட்டைமலை, சலவன்பேட்டை மலைகளின் மீதும் தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00