புகழ்பெற்ற விருதகிரீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா : திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

Mar 10 2017 6:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

புகழ்பெற்ற விருதகிரீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் புகழ்பெற்ற விருதகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மாசிமகத் திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. பின்னர் சுவாமிக்கு நாள்தோறும் பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனைதொடர்ந்து முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. நான்கு மாட வீதிகளில் வலம் வந்த விநாயகர், முருகர், விருகிரீஸ்வரர், விருதாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிராமத்தில் உள்ள விருதபுரீஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற திருத்தேரை, பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் திரு. கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடன் செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00