திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்போற்சவத்தையொட்டி உற்சவர் மலையப்பசுவாமி தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

Mar 13 2017 8:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்போற்சவத்தையொட்டி, உற்சவர் மலையப்பசுவாமி தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், கடந்த 5 நாட்களாக நடைபெற்ற தெப்போற்சவ விழா நேற்றிரவு கோலாகலமாக நிறைவடைந்தது. உற்சவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து அருளினார். பவுர்ணமி தினத்தை முன்னிட்டு தெப்போற்சவத்தைபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனிடையே, நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் மாசிமகப்பெருவிழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், காரைக்கால் அடுத்த பட்டினச்சேரி கடற்கரையில், மாசிமகத்தை முன்னிட்டு திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் உள்ளிட்ட எட்டு பெருமாள் சுவாமிகள், தீர்த்தவாரி நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தூய சவேரியார் ஆலயத்தில், தவக்காலத்தையொட்டி தவநடைபயணம் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, புதிய பேருந்து நிலையம் அருகே புனித அந்தோணியார் ஆலயத்தில் முடிவடைந்தது. இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00