மாசித்திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு - பூச்சொரிதல் விழா, பூக்குழித்திருவிழா, திருவிளக்குப்பூஜை, தெப்பத்திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்பு

Mar 15 2017 10:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் மாசித்திருவிழாவையொட்டி, பூச்சொரிதல் விழா, பூக்குழித்திருவிழா, திருவிளக்குப்பூஜை, தெப்பத்திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன.

திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் மாசிப் பெருந்திருவிழா கடந்த 24ம் தேதி பூச்சொரிதல் நிகழ்வுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு பூத்தமலர் பூ அலங்காரம், சாமி சாட்டுதல், கொடியேற்றம் உள்ளிட்ட மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் முடிவடைந்த நிலையில், மாரியம்மன் தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை தரிசித்து அருள் பெற்றனர். விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசிப்பெருந்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் விரதமிருந்து அக்கினி சட்டி ஏந்தி வந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோயில் முன்பாக கழுமரம் நடப்பட்டு, அதில் இளைஞர்கள் பலர் ஏறினர். பின்னர் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் சிறுவர், சிறுமியர். முதியவர், பெண்கள் உள்ளிட்ட சுமார்15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். மாலையிலிருந்து இரவு வரை நீடித்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில், மதுரை, திருச்சி, திண்டுக்கல், சென்னை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

காரைக்கால் நித்தீஸ்வரத்தில் அமைந்துள்ள ஸ்ரீநித்தியக்கல்யாணி சமேத ஸ்ரீநித்தீஸ்வரர் சுவாமி ஆலயத்தில், 21ம் ஆண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதையொட்டி, விநாயகர், சிவன், சுப்ரமணியர் மற்றும் பார்வதி தேவியை ஏராளமான பெண்கள் பல வண்ண மலர்கள் கொண்ட தட்டுக்களை கைகளில் ஏந்தி ஆலய பிரகாரத்தை வலம் வந்த பின்னர் ஸ்ரீதுர்கைக்கு புஷ்பாபிஷேகம் செய்தனர். இதனைத்தொடர்ந்து மகாதீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசிமக பெருவிழா கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, கல்யாணசுந்தரர் சுவாமி தம்பதி சமேதரராய் மணிகர்ணிகை தீர்த்தத்தில் எழுந்தருளும் தெப்பத்திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீசந்திமறித்தம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி, ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும்ந டைபெற்றது. தொடர்ந்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் மாசி பெருவிழாவின் எட்டாம் கொடைவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் ஏராளமான பெண்கள் வருகை தந்து பொங்கலிட்டு வழிபாடு மேற்கொண்டனர்.

தூத்துக்குடியில் உள்ள பழம்பெருமை வாய்ந்த சிவன் கோயிலில், கடந்த 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அறநிலையத்துறை சார்பில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவில் கோபுரம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஆலயத்தின் மூலஸ்தானம், அம்பாள் சன்னதி மற்றும் கொடிமரம் போன்றவைகளில் சிற்பங்களுடன் கூடிய செம்புத்தகடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சைவ சமயத்தில் தலைமைப்பீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி பெருவிழா ஹஸ்த நட்சத்திர தினமான நேற்று உற்சவக் கொடி ஏற்றி தொடங்கி வைக்கப்பட்டது. இவ்விழாவின் தொடக்க உற்சவமாக ஸ்ரீதியாகராஜ சுவாமியுடன் தொடர்புடைய யானை ஏறுவோர் பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு ஆலயத்தின் கீழ் கோபுர வாயில்முன்பு அமையப்பெற்றுள்ள மண்டபத்தில் வெண்கொற்றக் குடையின் கீழ் ஐதீகத் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00