தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களில் மகா கும்பாபிஷேக விழா வெகுசிறப்பாக நடைபெற்றது : திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்

Mar 16 2017 10:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களில் மகா கும்பாபிஷேக விழாவெகுசிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில், வருஷாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி, மூலவர் மற்றும் பரிகார மூர்த்திகளின் கோபுர விமான கலசங்களுக்கு, வேதமந்திரங்கள் முழங்க புனித நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம் ராஜாஜி மார்கெட் பகுதியில் உள்ள தண்டு மாரியம்மன் கோயிலில், மகா கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மூலவர் விமானம் மற்றும் ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதனிடையே, புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் உள்ள ஸ்ரீநித்யகல்யாண பெருமாள் ஆலயத்தில், மாசி மாத பிரம்மோற்சவம், கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் விடையாற்றி உற்சவத்தை முன்னிட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00