மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், 450-வது ஆண்டு சமபந்தி விழா - சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற மும்மதத்தினர்

Mar 20 2017 7:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடியில் நடைபெற்ற 450-வது ஆண்டு சமபந்தி விழாவில் மும்மதத்தினர் பங்கேற்று வழிபாடு நடத்தி உணவருந்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடியில் உள்ள பழைய பள்ளி திருத்தலம் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். பண்டைய மன்னர்கள் காலத்தில் இந்த பகுதி மக்கள் கொடிய நோயால் ஒன்றால் அவதிபட்டனர். நீண்ட நாட்களாக இந்நோய்க்கு தீர்வு கிடைக்கவில்லை. பள்ளியாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள இந்து, கிறிஸ்துவ, முஸ்லீம் மதத்தினர் ஒன்றிணைந்து வழிபாடு நடத்தியதின் விளைவாக கொடிய நோயிலிருந்து விடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதல் திங்கட்கிழமை பழைய பள்ளி திருத்தலத்தில் மாபெரும் சமபந்திவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் 450-வது ஆண்டு விழா என்பதால் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில், மும்மதத்தினரும் கொண்டுவந்த காய்கறிகள், அரிசி உள்ளிட்டவற்றால் சமையல் செய்து, சமபந்தி விழாவில் உணவு பறிமாறப்பட்டது. மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக கொண்டாடப்பட்ட இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00