தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Apr 22 2017 7:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள மிகவும் பழமைவாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை நடராஜ சிவாச்சாரியார் கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூரில், சங்கீத மும்மூர்த்திகளில் மூன்றாவதாக அவதரித்த முத்துஸ்வாமி தீட்சதரின் 242ம் ஆண்டு ஜெயந்தி விழாவையொட்டி இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இசைப்பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்று, நவாவர்ண கீர்த்தனை உள்ளிட்ட பல்வேறு கர்நாடக சங்கீத கீர்த்தணைகளை பாடினர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தந்தி மாரியம்மன் கோயில், சித்திரை திருவிழாவையொட்டி முத்துபல்லக்கு விழா நடைபெற்றது. இதில், பஞ்ச வாத்தியம், பூக்காவடி, சிங்காரி மேளம், முத்துரத காளையுடன் ஊர்வலம் நடைபெற்றன. நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலத்தில் தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.

இதனிடையே, மழை பெய்ய வேண்டியும், உலக நன்மை வேண்டியும் ஈரோடு ராத்திரி சத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ்ராகவேந்திரா கோயிலில், அகண்ட பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு, பாராயணம் படித்து பிரார்த்தனை செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00