வைதீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் : கும்பகோணத்தில் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படுகின்றன

Apr 24 2017 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

வைதீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கும்பகோணம் பகுதியில் பல்வேறு இடங்களில் உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை ஆன்மீக அமைப்புகளும், தொண்டுநிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

பிரசித்தி பெற்ற செவ்வாய் பரிகாரத் தலமான வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள வைத்தியநாத சுவாமி ஆலயத்தில், ஆண்டுதோறும் பங்குனி மாத கடைசி செவ்வாய் கிழமையன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை பங்குனி மாத வழிபாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயில் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு கும்பகோணத்தை ஒட்டியுள்ள பல்வேறு இடங்களில் உணவு, குடிநீர், மோர், இனிப்பு போன்றவற்றை ஆன்மீக அமைப்புகள் வழங்கி வருகின்றன.

இதேபோல், திருவிடைமருதூர், ஆடுதுறை, திருப்புவனம் போன்ற பகுதிகளிலும் பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு உணவு, சிற்றுண்டி, குடிநீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00