தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

Apr 25 2017 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ரெங்கநாதர் சுவாமிக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கும் பட்டு வஸ்திரங்களும், தாயாருக்கு பட்டுப் புடவைகளும் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் திருத்தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீநெல்லையப்பர் சமேத, காந்திமதி அம்பாள் திருக்கோவிலில், சித்திரைத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கியது. இதையொட்டி சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இரவில் சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெ்றறது. இதையடுத்து நடைபெற்ற வீதியுலா நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், வரும் 2ம் தேதி நடைபெறுகிறது.

தஞ்சை பெரியகோவிலில், சித்திரைப்பெருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று மேஷ வாகனத்தில் ஸ்ரீசுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் தஞ்சை ராஜவீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவையொட்டி, பெரியகோவிலின் நந்திமண்டபத்தில் சின்னமேளம் என்னும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஆக்கூரில் அமைந்துள்ள ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆலயத்தில் பக்தர்கள் மாவிளக்கு பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் இருந்து காவடி, கரகம், புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. அங்கு பூக்குழியில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

நாகை மாவட்டம், செம்பனார் கோயிலில் அமைந்துள்ள மருவார் குழலியம்மை உடன் சுவர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில், சூரியன் சிவபெருமானை பூஜை செய்யும் ஐதீகப்படி, சுவாமி மேல் சூரிய ஒளி வீசும் அதிசய நிகழ்ச்சி நடைபெற்றது. சித்திரை மாதம் 7ம் தேதி முதல் 18ம் தேதி வரை 12 நாட்களுக்கு நடைபெறும் இந்த விஷேச நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்துவர். இதையொட்டி, சுவர்ணபுரீஸ்வர், மருவார்குழலியம்மை மற்றும் நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

சைவ சமயத்தின் தலைமைப் பீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் சோமாவரத்தை முன்னிட்டு நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியன் பெருமானை வழிபட்டனர். மேலும் ஸ்ரீதியாகராஜ சுவாமிக்கு நடைபெற்ற சாயரட்சை பூஜையிலும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி பிரதோசத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், களியன்காடு சிவன் கோவிலில் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வேலூர் கோட்டையில் அமைந்துள்ள மிகப் பழமையான ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் சோமவார பிரதோஷ விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகார நந்திக்கு விசேஷ அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. தொடர்ந்து மகாதீபாராதனையும் காட்டப்பட்டது. பின்னர் நடைபெற்ற சுவாமி வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை பிரதோஷ வழிபாட்டையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுடன், நந்திக்கு பால், தயிர், வெண்ணெய், சந்தனம், போன்ற வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

தூத்துக்குடி சிவன் கோவிலில் மாணவர்களுக்கு கோடைகால இந்து சமய பண்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டது. இதில் இந்து கலாச்சாரம், பண்பாடு, தேவாரம், திருவாசகம் மற்றும் பகவத்கீதை போன்றவை பேராசியர்களைக் கொண்டு விளக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00